வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டிதமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்குவிந்துள்ளனர். குறிப்பாக மாதா சொரூபம் தாங்கிய வாகனத்தில் மரியே வாழ்க முழக்கமிட்டு மாதா புகழ் பாடியபடியும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கடலூர் ,சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்பாதயாத்திரையாகவும் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வேளாங்கண்ணியிலுள்ளதங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யும் இடம், பேருந்து நிலையம், உணவகங்கள்,கடைவீதி ஆகியன அனைத்தும்நிரம்பி வழிகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு தற்காலிக கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளநிலையில்,வேளாங்கண்ணியே விழா கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் நான்கு மாவட்டங்களைச்சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.