Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை...

“தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!

-

 

"தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!
Photo: Amit Shah

வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா அருகே உள்ள கந்தநேரியில் இன்று (ஜூன் 11) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய உள்ளது. தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த கைதி, மாஸ்டர் பட நடிகர்!

தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துள்ளார். தமிழரின் சிறப்பான திருக்குறளை 23 மொழிகளில் மொழி பெயர்க்க காரணமானவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்திற்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கியுள்ளது.

"தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!
Photo: Amit Shah

ரூபாய் 50,000 கோடி மதிப்பில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீட், சிஆர்பிஎஃப் உள்ளிட்டத் தேர்வுகளை தமிழில் எழுத வழி வகுத்துத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. 2024-ல் தமிழக மக்களின் ஆசீர்வாதத்தில் 25 இடங்களை வென்று தர வேண்டும். சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூபாய் 1,260 கோடி மதிப்பில் சென்னையில் புதிதாக விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை தொழில் வாய்ப்பும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்த போது, தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன்? மதுரையில் எய்ம்ஸ் ஏன் திறக்கப்படவில்லை என்பதை தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும்.

பரவும் ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமுறை, தலைமுறையாக காங்கிரஸ், தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. 2024- ல் மீண்டும் ஒருமுறை 300- க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” எனத் தெரிவித்தார்.

MUST READ