Homeசெய்திகள்தமிழ்நாடுவேங்கைவயல் விவகாரம் - 8 பேர் ரத்தம் தர மறுப்பு

வேங்கைவயல் விவகாரம் – 8 பேர் ரத்தம் தர மறுப்பு

-

வேங்கைவயல் விவகாரம் – 8 பேர் ரத்தம் தர மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு 8 பேர் ரத்தம் தர மறுப்பு தெரிவித்தனர்.

wat

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவையில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முதற்கட்டமாக வேங்கைவயலில் ஒன்பது பேர் இறையூர் மற்றும் கீழமுத்துக்காடு பகுதிகளைச் சேர்ந்த தலா ஒரு நபர் என மொத்தம் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை நாடிய நிலையில் 11 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகளை எடுக்க நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து வேங்கைவயலை சேர்ந்த ஒரு காவலரை தவிர மற்ற எட்டு பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை கொடுக்க முன் வராத நிலையில் ரத்த மாதிரிகளை கொடுக்க வந்துள்ள இறையூர் கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த தல ஒரு நபர் வேங்கைசேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட மூன்று பேரிடம் மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

MUST READ