Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி: பிரணவ் வெங்கடேஷ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி: பிரணவ் வெங்கடேஷ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

-

- Advertisement -

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தவீரர் பிரணவ் வெங்கடேஷை முதலமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டினார் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் வழங்கினார்.உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி: பிரணவ் வெங்கடேஷ்க்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாட்டு செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை சிறப்பித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார். இந்த நிகழ்வு இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு, மாநிலத்தை விளையாட்டு முன்னேற்றத்தில் நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி, ஊக்கத்தொகை மற்றும் தேவையான வளங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மொண்டெனேகுரோவில் நடந்த FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற 18 வயது பிரணவ் வெங்கடேஷை முதலமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டினார் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் வழங்கினார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரணவ், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்று ரூ.6 லட்சம் பரிசு பெற்றார்.

இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேஷின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

‘ஹெவி’யாக ஈர்த்த மோடி..? பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்..!

MUST READ