Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லிக்கு செல்லும் விஜய் மக்கள் இயக்கத்தினர்!

டெல்லிக்கு செல்லும் விஜய் மக்கள் இயக்கத்தினர்!

-

- Advertisement -

 

பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்.....கைதானதால் பரபரப்பு!

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லிக்கு செல்லவுள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சி – கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் தனது இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அத்துடன், அரசியல் சூழல், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து நடிகர் விஜய் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் சந்தித்துப் பேசியிருந்தார். அத்துடன், அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் விஜய், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் கமிட்டியை அமைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வரும் பிப்ரவரி 04- ஆம் தேதி டெல்லிக்கு செல்கின்றனர். டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சென்று விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவுச் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ