நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வி.சி.க. துணைப்பொதுச்செயலாளரின் வீட்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை!
கடந்த மார்ச் 08- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தொடங்கி வைத்ததுடன், கட்சியில் முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பான காணொளி காட்சியையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சுமார் 50 லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் மூலம் கட்சியில் உறுப்பினராக இணையலாம் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
40 தொகுதிகளிலும் நான் தான் வேட்பாளர் என நினைத்து உழைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
இதனிடையே, நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் த.வெ.க.வில் உறுப்பினராகப் பதிவுச் செய்து, தங்களது மின்னணு உறுப்பினர் அட்டையை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.