மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றாலும் மார்தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன் என சென்னையில் டெல்லியில் தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “விருதுநகர் தொகுதியில் மறு தேர்தல் கோரிக்கை இல்லை, விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். தோல்வியை கண்டு பயப்படுகிற கட்சி தேமுதிக அல்ல. மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றாலும் மார்தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட வலியின் வெளிபாடுதான் இது..
ஒருவாரத்தில் முடிவு தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை அறிவிக்கட்டும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.