விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.36 கோடி சொத்து சேர்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.36 கோடி சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் தனது பெயரிலும், மனைவி ரம்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெயரிலும் சொத்து குவித்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராசி புளூ மெட்டல்ஸ், வி.இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெயரிலும் விஜயபாஸ்கர் சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்த குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இதற்கு பிறகு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜராக செய்து அதன் பிறகு இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.