சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதரணி, டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்.24) நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து, விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கியது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. அதைத் தொடர்ந்து, விஜயதரணி மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் சட்டமன்ற கொறடா உள்ளிட்டோர் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த சூழலில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, விஜயதரணி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், நெல்லையில் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அறிவித்துள்ளார்.
ஜடேஜா சிறப்பான பந்துவீச்சு – இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்
ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலி என விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என்று குறிப்பிட்ட கடிதத்தை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார்.
அதைத் தொடர்ந்து, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வரும் மக்களவைத் தேர்தல் உடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.