Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

-

 

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நிலையில் விஜயதரணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த விஜயதரணி, நேற்று (பிப்.24) டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, விஜயதரணியைக் கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ் தலைமை. அதைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியிருந்தார்.

பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடிக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அன்புமணி

இந்த சூழலில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தைத் தவிர்க்கும் வகையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதரணி ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்கு விஜயதரணி ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் விஜயதரணி.

MUST READ