தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களைக் கவர்ந்தது. பொதுச்சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுக் கூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்தின் சினிமா, அரசியல் பங்களிப்பு கோடிக்கணக்கான இதயங்களில் இருக்கும். அவரது குடும்பத்தார், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பொன் நெஞ்சம் கொண்ட விஜயகாந்த் போற்றுதலுடன் நினைவுக் கூறப்படுவார். விஜயகாந்தை நேசித்த, நம்பிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தனது திரை கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேச பக்தியைத் தூண்டினார் விஜயகாந்த்” எனத் தெரிவித்துள்ளார்.