பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்கு பிறகு தீவுத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வழிநெடுகிலும் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நேரில் அஞ்சலி செலுத்திய ராம்கி வலியுறுத்தல்
அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. இறுதிச்சடங்கில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு. உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், சுப்பிரமணியன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜி.கே.வாசன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புக் கருதி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என 200 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் இறுதிச் சடங்கை காண, அலுவலகத்தின் வெளியில் ராட்சத எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.