‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கு கட்சியைத் தொடங்கிய நடிகர்களான விஜயகாந்த்தும், கமல்ஹாசனும் மாநாடு நடத்தி கட்சியின் பெயரை தெரிவித்தனர்.
“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
தமிழகத்தில் நடிகர்கள் அரசியல் கட்சியைத் தொடங்குவது புதியதல்ல. எம்.ஜி.ஆரில் தொடங்கி சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் என பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தியவர்களே. இவர்களில் விஜயகாந்த் கடந்த 2005- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை திருநகர் பகுதியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கினார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதற்கு அடுத்த ஆண்டே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 232 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்களை களமிறக்கியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற மற்றவர்கள் தோல்வியைத் தழுவினர். எனினும், கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு கமல்ஹாசனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இவரும் தனது கட்சியைத் தொடங்க தேர்வுச் செய்த இடம் மதுரையே. 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி 21- ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த தொடக்க விழாவில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி”- நடிகர் விஜய்!
இதில் மக்கள் நீதி மய்யம் என தனது கட்சியின் பெயரை வெளியிட்டார் கமல்ஹாசன். அடுத்தாண்டே நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த கட்சி 36 இடங்களில் போட்டியிட்ட போதும் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனினும், 3.8 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றது. கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. எனினும், 2.52 விழுக்காடு வாக்குகளை அக்கட்சிப் பெற்றது.

இந்த நிலையில், எந்தவொரு மாநாட்டையும் நடத்தாமல், எளிமையான முறையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ள விஜய், தனது கட்சி மாற்று கட்சி என்றும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், தனது கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நடிகர் விஜய் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.