Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது வழங்குவார்?

விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது வழங்குவார்?

-

 

விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது வழங்குவார்?

2024- ஆம் ஆண்டுக்கான பத்மவிருதுகளுக்கு தேர்வுப் பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

“4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்துறை என அனைத்து துறைகளிலும் தனித்துவமான மற்றும் சிறப்பான சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2024- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இவர்களில் சிலருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி மாளிகையில் விருதுகளை வழங்கி கௌரவித்தார். குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். இதேபோல், இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பின்னணி பாடகி உஷா உதூப், உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம்நாயர் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மறைந்த தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருதும், பழம்பெரும் நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான வைஜேந்தி மாலாவிற்கு பத்ம விபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் உள்பட சிலருக்கு அடுத்த வாரம் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார்.

MUST READ