சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு (வயது 71) செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
‘அந்த படங்களில் நடிக்கவே மாட்டேன்’…. நடிகர் சிவகார்த்திகேயன்!
விஜயகாந்தின் மறைவை அடுத்து, அக்கட்சித் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மருத்துவமனையில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்தின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.