Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!

-

 

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், பிரேமலதாவின் கரம் பற்றி ஆறுதல் கூறினார். மேலும், விஜயகாந்த் மகன்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

கேப்டன் விஜயகாந்த் பெற்ற விருதுகள்!

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசின் சார்பாக, பிரதமர் நரேந்திர மோடி என்னை அனுப்பி வைத்தார். கஷ்டங்களைப் பார்க்க முடியாத அளவுக்கு இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதைக் கொடுத்தவர் விஜயகாந்த். அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உத்வக் கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

MUST READ