Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

-

- Advertisement -

 

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், விஜயகாந்தின் குடும்ப வழக்கப்படி, சடங்குகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

“சகோதருக்கு செய்யக்கூடிய மரியாதை”- தமிழ்நாடு அரசு அறிக்கை!

பின்னர் விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு, தே.மு.தி.க. கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் சாலையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இறுதிச் சடங்கு நிகழ்வைக் கண்ணீர் மல்க கண்டுகளித்தனர்.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

இறுதிச்சடங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

MUST READ