Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டியில் திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது - அன்புமணி ராமதாஸ்...

விக்கிரவாண்டியில் திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது – அன்புமணி ராமதாஸ் பேச்சு

-

திமுக அதிகார பலத்தியில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது என விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த இடைத்தேர்தலால் யாரும் ஆட்சியை இழக்க போவதுமில்லை, ஆனால் இது 2026 தேர்தலுக்கான முன்னோட்டம். திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர். பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது. . தமிழ்நாட்டிற்கு சமூகநீதியை கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அப்போது 69 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு 9-வது அட்டவணையை கொண்டுவந்தார். ஜூலை 8 ஆம் தேதிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் 69 விழுக்காட்டிற்கு ஆபத்து உள்ளது. இந்த விவகாரத்தில் நிச்சயமாக மத்திய அரசை வலியுறுத்துவோம். கள்ளக்குறிச்சி சாராய இறப்பு போன்று நாளை விக்கிரவாண்டியிலும் நடக்கலாம். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பேராபத்து வந்துள்ளது தப்பி தவறி 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தால் இந்த ஆட்சி கலைக்கப்படும். இடைத்தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வென்றால் மக்கள் நன்றாக இருப்பார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.

எல்லா சமுயாயமும், திமுக உட்பட அனைத்து கட்சியினரும் பாமகவிற்கு வாக்களிக்க தயராகவிட்டனர். பாமக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெருவார். `விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு பக்கம் பண பலமும், ஆட்சி பலமும் சூழ்ந்துள்ளது. பாமக கூட்டணி பலத்தையே நம்பி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது” என இவ்வாறு பேசினார்.

 

MUST READ