விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை ஈட்டி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சரித்திரம் படைத்தது. திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட வன்மம் கலந்த அவதூறுகள் பொடிப் பொடியாக்கப்பட்டு, தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறார்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வழி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர் வெற்றிகள் பறை சாற்றுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேர்தல் களத்தில் வெற்றிக்கனியை பறிக்க உழைத்த திமுக கூட்டணி தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.