கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை (ஏப்ரல் 19) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!
கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி, அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குழித்துறை நகராட்சி மற்றும் அருமனை, இடைக்கோடு, களியக்காவிளை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., நாம் தமிழர் என மொத்தம் 10 வேட்பாளர்கள் விளவங்கோட்டில் போட்டியிடுகின்றனர்.
“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!
அங்கு 272 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.