சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா். பின் சேலம் வட்டாட்சியர், மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று சென்றார்.
சேலம் மாநகராட்சியின் வார்டுகளை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சார்பில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி கொண்டப்பநாயக்கன்பட்டி , சன்னியாசிகுண்டு, எருமாப்பாளையம், நாழிக்கல்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என அந்தந்த கிராம மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டி , எருமாபாளையம் , சன்னியாசிகுண்டு ஆகிய கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்கும் போது சொத்து வரி, தொழில் வரி ,குடிநீர் வரி என பல்வேறு வரிச் சுமைகள் தங்கள் மீது விழும் மேலும் கிராம ஊராட்சியில் பணியாற்றி வரக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு பறிபோகும் என கூறி என்று சன்னியாசி குண்டு பகுதியில் வாழும் மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் தாசில்தார் தாமோதரன் அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் சன்னியாசி குண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று கூடிய ஊர் மக்களுடன் , சேலம் வட்டாட்சியர் தாமோதரன், காவல் உதவி ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சன்னியாசி குண்டு ஊராட்சியில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ள நிலையில் இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் இத்திட்டம் பறி போகி எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என கூறி ஊர் மக்கள் அதிகாரிகளிடம் கெஞ்சினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மனுக்களைப் பெற்ற பின்பு வட்டாட்சியர் அங்கிருந்து கிளம்பினார்.
மீனவர் கைது விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!