தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், சேலம் ராஜகணபதி கோயில், கோவை ஈச்சனாரி கோயில் ஆகிய கோயில்களில் அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரைத் தரிசனம் செய்து வருகின்றன.
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற விநாயகர் தங்ககீரிடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மணக்குள விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.