Homeசெய்திகள்தமிழ்நாடு'சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை!'- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

‘சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை!’- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

-

 

மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடைக்கால விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில், “தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ