திருமுல்லைவாயிலில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பின் 2- வது தளத்தில் வசித்து வருபவர் தாவூத் பாஷா (வயது 24). இவர் மூன்றாவது சிறப்பு போலீஸ் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜன.20) இரவு அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தையுடன் நடைபயிற்சி மேற்கொள்ளச் சென்றுள்ளார்.
அப்போது, ‘வாஷிங் மெஷினில்’ மின்கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.
ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, கிரைண்டர், துணிகள், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமாயின. வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.