Homeசெய்திகள்தமிழ்நாடுஒகேனக்கலுக்கு நீர்வரத்து 31,000 கனஅடியாக அதிகரிப்பு... அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க 11வது நாளாக தடை!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 31,000 கனஅடியாக அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க 11வது நாளாக தடை!

-

- Advertisement -
kadalkanni

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 31,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

hogenakkal

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

hoggenakal
 

இந்த நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 11வது நீட்டிக்கப்பட்டுள்ளது.

MUST READ