முல்லை பெரியாறு அணையில் இருந்து 18- ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்… மொத்தமாக மாறிப்போன விஜய் மக்கள் இயக்கம்!
இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் 18- ம் கால்வாய், பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்கள் ஆகியவற்றின் மூலமாக 11,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் தி.மு.க. அரசு இந்த கால்வாய்களில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, பலமுறை மனுக்களை அளித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, 18- ம் கால்வாய், பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் ஆகியவற்றின் மூலமாக பாசனத்திற்கு உடனே தண்ணீரை திறக்க வலியுறுத்தி, தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் டிசம்பர் 14- ஆம் தேதி உத்தமபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.