பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்புக்குழுவை அமைத்து தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
நீர்வளத் துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இயற்கை பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று நீர்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.