Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை அண்மையில் 120 அடியை எட்டியது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஓரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகளவு நீர் திறப்பால் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோ பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையின் 16 கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம்.செல்வகணபதி, மணி, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

MUST READ