கேரள மாநில வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் வாழும் நமது கேரள சகோதரர்களின் துன்பத்தில் உதவும் பொருட்டு, கேரளா முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில், ரூபாய் 10 லட்சம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்தையும் இழந்து தவிக்கும் அந்த மக்களுக்கு, தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்களை திரட்டி, கட்சியின் கேரள மாநிலக் குழுவின் துணையோடு அனுப்ப உள்ளதாகவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.