வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை கேரள முதலமைச்சரிடம், திருமாவளவன் நேரில் வழங்கினார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி இன்று 13வது நாளாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசுகள் சார்பிலும், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், வயநாடு நிவாரண பணிகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து
ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் அக்கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.