Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

-

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்செரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ