Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

-

மழை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 05.07.2024 மற்றும் 06.07.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

07.07.2024 முதல் 11.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ