Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 09.03.2024 முதல் 15.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 09.03.2024 முதல் 11.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ