- Advertisement -
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் – காண்ட்ராக்டரை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் எனது கார் வந்தாலே டேமேஜ் ஆகுது கான்டிராக்டரை வறுத்தெடுத்த மதுரை மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியிலிருந்து குலசேகரன் கோட்டை வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்க நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

அப்போது அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்தார். தார் சாலை மிக மோசமான நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர். உடனே அதிகாரிகளை கூப்பிட்டு இப்படி ரோடு போட்டு என்ன யூஸ்? எனது கார் வந்தாலே டேமேஜ் ஆகுது இது எப்படி நல்லா இருக்கும்? என கடிந்து கொண்டார்.