கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு காலம் ஜனவரி 5ம் தேதி முடிவடைகிறது. அந்த தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடித்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என முனியன் என்பவர் வழக்கு பதிவிட்டுள்ளார்.
வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
அரசு உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? – ப. சிதம்பரம் கேள்வி