Homeசெய்திகள்தமிழ்நாடுஎந்தெந்த ரயில்  சேவை ரத்து ?

எந்தெந்த ரயில்  சேவை ரத்து ?

-

 எந்தெந்த ரயில்  சேவை ரத்து ?தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: 8 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் சத்து செய்யப்பட்டுள்ளது.

போடிநாயக்கனூரில் இருந்து இன்று இரவு 8.30-க்கு சென்னை சென்ட்ரல் புறப்பட இருந்த அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இரவு 10.30-க்கு புறப்பட இருந்த போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் நாளை காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட இருந்த ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5.55-க்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16, 17-ம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலை ரயில் பாதையில் பாறைகள், மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

MUST READ