Homeசெய்திகள்தமிழ்நாடுயார் இந்த ஷிவ்தாஸ் மீனா?

யார் இந்த ஷிவ்தாஸ் மீனா?

-

யார் இந்த ஷிவ்தாஸ் மீனா?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவதாஸ் மீனா

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை கவனித்துவந்த ஷிவ்தாஸ் மீனா, இனி தலைமைச் செயலாளராக பணியாற்றுவார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷிவ்தாஸ் மீனா 1989-ஆம் ஆண்டும் ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கியவர். காஞ்சிபுரம் உதவி ஆட்சியராக பணியை தொடங்கிய ஷிவ்தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியர் உட்பட பல பதவிகளை வகித்தவர்.

Shivdas Meena will be the 49th Chief Secretary of Tamil Nadu – announcement today | Shiv das Meena will be the 49th Chief Secretary of Tamil Nadu – announcement today

ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்பு வகித்தவர். மேலும் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் துறையின் முதன்மை செயலாளராகவும் ஷிவ்தாஸ் மீனா பதவி வகித்தவராவார். 58 வயதாகும் ஷிவ்தாஸ் மீனா, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தான், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளை அறிந்த ஷிவ்தாஸ் மீனா, ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகங்களிலும் பணிபுரிந்தவர். ஒன்றிய அரசுப் பணியில் இருந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பினார். 2016ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ