Homeசெய்திகள்தமிழ்நாடுகூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை

-

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற பகுதிகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமின் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார்.
அப்போது அதிகமான வழக்குகள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்ற போதை பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது  மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் அதிகமான நபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை

அவர்கள் முன்ஜாமின் மற்றும் ஜாமீன் கோறிய மனுக்களை விசாரணை செய்துள்ளார். இதன் அடிப்படையில்  இன்று காலை நீதிபதி தாமாக முன்வந்து இது போன்ற வழக்குகள் மிகவும் வேதனை அளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கடைகளை மூடுகிறது.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்று  கடைகளை திறந்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இது போன்ற போதை பொருட்கள் தயார் செய்ய மற்றும் விற்பனை செய்வதற்கு எந்த வித தடையும் இல்லை. அதனால் மறைமுகமாக வேறு மாநிலங்களில் இருந்த சட்டவிரோதமாக தமிழகத்தில் கொண்டு வந்து இதுபோன்ற மாணவர்கள், இளைஞர்களுடைய எதிர்காலத்தை சீரழிக்க கூடிய வகையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இது சம்பந்தமாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு மதியம் நேரில் வரவேண்டும். வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

விளக்கம் கேட்ட போது கூல் லிப் போதைப்பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்தார். இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருவதாக தெரிவித்து அத்தகைய  இத போன்ற போதை பொருட்களை ஏன் இந்தியா முழுவதும்  தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை? குறிப்பாக ஒன்றிய அரசு இதற்கு ஜிஎஸ்டி வரி விதித்து அதையும் வசூல் செய்து வருகிறது.

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் –  செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்

மாநில அரசு கூல் லிப் போன்ற போதை பொருட்களை இந்தியா ழுழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்ககை எடுத்துள்ளது என்பதை அரசிடம் இருந்து பொற்று தெரிவிக்க வேண்டும்.

அதற்கு தகுந்த படி உயர் நீதி மன்றம் உரிய உத்தவு பிரபிக்கும்  என தெரிவித்துள்ளார்.

MUST READ