Homeசெய்திகள்தமிழ்நாடுதேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி

-

- Advertisement -

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்துள்ள பனசுமான்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பரமேஷ் (46). இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பரமேஷ், தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார். அந்த நேரம் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் பனசுமான் தொட்டி கிராம பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. இதனைத்தொடர்ந்து காட்டு யானைகளை கண்டதும் பரமேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு:

அப்போது திடீரென ஒரு காட்டு யானை, விவசாயி பரமேஷை துரத்தி சென்று பலமாக தாக்கி, தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறையினரிடம் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

MUST READ