Homeசெய்திகள்தமிழ்நாடுவனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் - எதிரில் யாரும் வந்துடாதிங்க ...!

வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் – எதிரில் யாரும் வந்துடாதிங்க …!

-

- Advertisement -

வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் நள்ளிரவில் ஊருக்குள் உலா வருவதனால் எதிரில் யாரும் வந்துடாதிங்க என  வனத்துறை சார்பாக பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் - எதிரில் யாரும் வந்துடாதிங்க ...!கோவை தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள்ளும், விளை நிலங்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இன்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். யானைகள் பெரும்பாலும் நள்ளிரவில் வனத்திலிருந்து வெளியேறி ஊருக்குள் உலா வருகின்றன.

இரவு குட்டிகளுடன் ஆறு யானை கொண்ட யானைகள் கூட்டம் தடாகம் அருகே சோமையம் பாளையம் குடியிருப்பு பகுதியில் வீதிகளுக்குள் உணவு தேடி வரிசையாக நடந்து சென்று உள்ளது. அதனை அங்கு இருந்த ஒரு குடும்பத்தினர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அந்த செல்போன் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நள்ளிரவு மட்டுமின்றி பொதுவாகவே இருள் சூழந்த நேரத்தில் மாலை முதல் காலை வரை, வன ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் யாரும் பொதுவெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் மலை அடிவாக கிராம மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

பாலிவுட்டில் அறிமுகமாகும் அமரன் பட இயக்குனர்….. வெளியான புதிய தகவல்!

 

MUST READ