Homeசெய்திகள்தமிழ்நாடுபத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் - மூர்த்தி உறுதி

பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி

-

- Advertisement -

தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் திமுக ஆதிதிராவிடர் அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு 20 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மண்டலம் 7 வது குழு தலைவர் பி.கே. மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

எல்.பி.எப். மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடி, முகப்பேர், பாடி குப்பம், நொளம்பூர் பகுதிகளை சேர்ந்த 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறுகையில்,

கடந்த ஆண்டு வணிகவரித்துறையில் 24 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளது. அதில் 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி வணிகவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும். கடந்த ஆண்டு வரை 24 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பதிவுத்துறையில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 3500 கோடி அதிகமாக வந்துள்ளதாக தெரிவித்தார். பத்திர பதிவில் நடந்த முறைகேடு தொடர்பாக படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சொத்துகளை மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 17000 புகார் வந்துள்ள நிலையில், 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

MUST READ