கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுவுக்கு கொரோனா தொற்று காரணமாக திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது. நேற்று பிற்பகலில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது. ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுவதாக கூறினர்.
உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார் எனவும், 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார் எனவும் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.