கோடை மழையால் பெண் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் கால வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்புப் பணித் தீவிரம்!
இந்த நிலையில் தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த தேவிகா என்பவா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தாா்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது.