Homeசெய்திகள்தமிழ்நாடுதுணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

-

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலித்தொழிலாளியான இவரது மகள் ஜோதிக்கும், கர்நாடகாவை சேர்ந்த சிவராஜ் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ஜோதி, தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் ஜோதி, துணி துவைத்துவிட்டு, அதனை காயப்போடுவதற்காக கம்பியில் போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட ஜோதியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ