Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வழக்குப்பதிவு

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வழக்குப்பதிவு

-

சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த சண்முகம். இவர் கொண்டலாம்பட்டி மண்டலக் குழு முன்னாள் தலைவரும், மேலும் அதிமுக கழக செயலாளருமாக இருந்துள்ளார். இவர் கடந்த 3ம் தேதி இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்தது. இதில் கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்தனர்.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷை அன்னதானப்பட்டி காவல்துறை கைது செய்தது. 5 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக நிர்வாகி சதீஷ் உட்பட 10 பேரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணை நடத்தி வருகிறது. கஞ்சா விற்பனையில் சதீஷ் ஈடுபட்டுவந்ததாக சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் சதீஷ் சண்முகத்தை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் 55-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாருக்கும், சண்முகத்துக்கும் இடையே மாரியம்மன் கோயில் டிரஸ்ட்டி தலைவர் பதவி பெறுவதிலும், சாலை ஒப்பந்த பணி எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. மேலும், சதீஸ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது சம்பந்தமாக சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதன் காரணமாக சதீஸ்குமார் கூட்டாளிகள் சண்முகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் சதீஸ்குமார் உள்பட பத்து பேரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமிக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த போலீஸார் அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தாதகாப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அஜித், மகேஸ்வரன், தனலட்சுமி ஆகிய நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதிய சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கொலை வழக்கு: மத்திய அரசு மூன்று புதிய சட்டத்தை கடந்த 1-ம் தேதி அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு ஐபிசி 302 சட்டப்பிரிவுக்கு மாற்றாக புதிய சட்டப்பிரிவான பிஎன்எஸ்-103 சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தின்படி தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் உட்பிரிவுகள் 103(2) மற்றம் 1,2ல் தண்டனை விவரம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுள் தண்டனை வழங்கலாம். அதேபோல, ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்யும் போது, ஆயுள் தண்டனையும், தூக்கு தண்டனையும் வழங்க சட்ட சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ