கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் 13 பிரிவுகளில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!
இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண், விண்ணப்பத்தாரர் பெயர், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண் போன்றவற்றைப் பதிவிட வேண்டும்.
மேலும், வசிப்பது சொந்த வீடா? (அல்லது) வாடகை வீடா எனக் குறிப்பிட வேண்டும். வசிக்கும் மாவட்டம், வீட்டின் மின் இணைப்பு எண் போன்ற விவரங்களையும் விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும். கணக்கு வைத்துள்ள வங்கி மற்றும் கிளையின் பெயர் வங்கிக்கணக்கு எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
பதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, வருவாய் விவரம், வருமான வரிச் செலுத்துபவரா என்பதையும் குறிப்பிட வேண்டும். சொந்த வீட்டில் வசித்தால், அரசு திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். சொத்து, நிலம் மற்றும் வாகனங்களின் விவரங்களையும் விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும். அதன் பின்னர், அரசு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே விண்ணப்பிப்பதாக உறுதிமொழியினை வழங்கி கையொப்பமிடவேண்டும். அதைத் தொடர்ந்து, விண்ணப்பத்தை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.