Homeசெய்திகள்தமிழ்நாடுஉரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.

“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக, தருமபுரி மாவட்டம், தொப்பூருக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதலமைச்சர், ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்கான விண்ணப்ப முகாமைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக மீண்டும், சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர், தனி விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்பத் தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும்.

“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம், கடந்த 1989- ஆம் ஆண்டு தருமபுரியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ