Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!

மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!

-

 

மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!
File Photo

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 செலுத்தும் பணியை இன்று (அக்.14) காலை 11.00 மணிக்கு தொடங்கியது தமிழக அரசு.

வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 15- ஆம் தேதி அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி இன்று (அக்.14) காலை 11.00 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று இரவுக்குள் அனைத்து பயனாளிகளின் வங்கிக்கணக்கிலும் ரூபாய் 1,000 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!

நாளை (அக்.15) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே இன்று வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ