Homeசெய்திகள்தமிழ்நாடு"மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி"- தமிழக அரசு விளக்கம்!

“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!

-

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்காக, ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலினத்தவர்கள் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. துணைத் திட்ட நிதியை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே செலவிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துணைத் திட்ட நிதி செலவினதைக் கண்காணிக்க நிதித்துறையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்கு ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!

மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதைப் போலவே, ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்திற்காக ரூபாய் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பட்டியலினத்தவர்களுக்கு என்று ரூபாய் 1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ