Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

-

- Advertisement -

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருவாரூர் மாவட்டம் பெரம்பொன்னையூர் கிராமத்தில் வசித்து வந்தவர்  அய்யப்பன். இவருக்கு (வயது 30).  இவர் பிளம்பராக பணி செய்து வந்தார். அய்யப்பனின் அக்கா ராஜேஸ்வரி குன்றத்தூரையடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம்

இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் புதியதாக இரு ரூம்கள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு அய்யப்பன் பெரம்பொன்னையூர் கிராமத்திலிருந்து வந்தார்.

நேற்று இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் ‘டிரில்லிங்’ எந்திரம் வைத்து துளையிடும் வேலையில் ஈடுபட்டார். அப்போது சுவற்றில் இருந்த மின்சார ஒயரின் மீது ‘டிரில்லிங்’ எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அலறினார்.

இதனைக் கண்டதும் அக்கா ராஜேஸ்வரி தம்பியை காப்பாற்ற முயன்று தள்ளிவிட்டார். இதில் இரு நபர் மீது மின்சாரம் பாய்ந்தது. அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ